கட்டுநாயக்க: விமான நிலைய ஊழியர் ஒருவருக்கு கொரோனா - sonakar.com

Post Top Ad

Thursday, 17 December 2020

கட்டுநாயக்க: விமான நிலைய ஊழியர் ஒருவருக்கு கொரோனா

 


கட்டுநாயக்க விமான நிலையத்தில் சுத்திகரிப்பு பணியாளராகக் கடமையாற்றும் பெண்ணொருவர் கொரோனா தொற்றுக்குள்ளானதன் பின்னணியில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.


சிலாபம், ஆரச்சிகட்டுவயைச் சேர்ந்த 43 வயது பெண்ணொருவருக்கே இவ்வாறு கொரோனா தொற்றிருப்பது கண்டறியப்பட்டுள்ள அதேவேளை அவரோடு நெருங்கிய தொடர்புகளை வைத்திருந்த 10 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.


தற்சமயம் 8925 பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment