கொக கோலாவுக்கு 'கொரோனா': அவுஸ்திரிய நாடாளுமன்றில் சர்ச்சை - sonakar.com

Post Top Ad

Sunday, 13 December 2020

கொக கோலாவுக்கு 'கொரோனா': அவுஸ்திரிய நாடாளுமன்றில் சர்ச்சை

 


அவுஸ்திரிய நாடாளுமன்றில், கொக கோலா குளிர் பானத்துக்கும் கொரோனா இருப்பதாக (பொசிடிவ்) துரித கொரோனா பரிசோதனை முறைமை காட்டுவதை நிரூபித்துள்ளார் அந்நாட்டின் நாடாளுமன்ற உறுப்பினர் மைக்கல் ஷென்ட்லிட்ஸ்.


அரசாங்கம் முன்னெடுத்துச் செல்லும் கொரோனா பரிசோதனை முறைமைகள் சந்தேகத்துக்குரியவை என சுட்டிக்காட்டும் வகையில் நாடாளுமன்றில் அனைத்து உறுப்பினர்கள் முன்னிலையில் நேரடியாக இவ்வாறு ஒரு பரிசோதனையை அவர் செய்து காட்டியுள்ளதன் பின்னணியில் சர்ச்சை எழுந்துள்ளத.


விமான நிலையங்கள் மற்றும் பெரும்பாலான நாடுகளில் துரித பரிசோதனை முறைமை தற்போது அமுலில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment