ஜனாஸா எரிப்பு: அமெரிக்காவில் 23ம் திகதி ஆர்ப்பாட்டம் - sonakar.com

Post Top Ad

Sunday, 20 December 2020

ஜனாஸா எரிப்பு: அமெரிக்காவில் 23ம் திகதி ஆர்ப்பாட்டம்

 


இலங்கையில் நிகழ்ந்து வரும் கட்டாய ஜனாஸா எரிப்புக்கு எதிராக உலகளாவிய ரீதியில் பல்வேறு போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. 


இதன் தொடர்ச்சியில் அமெரிக்காவின் நியுயோர்க் நகரில் ஐ.நாவுக்கான இலங்கை அலுவலகம் எதிரே வரும் புதன் கிழமை 23ம் திகதி எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் மற்றும் வாகன பேரணி அங்குள்ள இலங்கை முஸ்லிம் சமூக ஆர்வலர்களால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.


மதியம் 12 மணி முதல் 2 மணி வரை ஏற்பாடு செய்யப்பட்டுள்ள குறித்த நிகழ்வுக்கு பெருமளவு மனித நேயமுள்ள மக்களின் பங்களிப்பு எதிர்பார்க்கப்படுகின்றது. மேலதிக விகரங்கள் தேவைப்படுவோர் படத்தில் காணப்படும் தொடர்பிலக்கங்கள் ஊடாக தொடர்பு கொள்ளும் படி வேண்டிக் கொள்ளப்படுகிறீர்கள். இது தொடர்பில் சோனகர்.கொம்முக்கு கருத்து வெளியிட்ட ஏற்பாட்டாளர்கள், நாட்டின் சுகாதார வழி காட்டல்களைப் பின்பற்றி இடம்பெறவுள்ள இவ்வார்ப்பாட்டம், பல் வேறு தொடர் நடவடிக்கைகளின் அங்கம் என விளக்கமளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:

Post a Comment