மினுவங்கொட மற்றும் பேலியகொட கொத்தனிகள் ஊடாக பரவி வரும் கொரொனா தொற்றினைக் கட்டுப்படுத்த மேலும் ஒரு மாத காலமாவது தேவைப்படும் என தெரிவிக்கிறார் பிரதி சுகாதார பணிப்பாளர் மருத்துவர் ஹேமந்த ஹேரத்.
தற்போதைய நிலவரத்தின் படி தினசரி கொரோனா தொற்றாளர் எண்ணிக்கை குறையும் என்றே எதிர்பார்ப்பதாகவும் எனினும், ஆறு வாரங்கள் வரை அவதானித்தே தீர்மானிக்க முடியும் எனவும் அவர் மேலும் விளக்கமளித்துள்ளார்.
தற்சமயம் 6140 பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment