ஜனாஸா எரிப்பு: ஹக்கீமும் நாடாளுமன்றில் பேசி விட்டார் - sonakar.com

Post Top Ad

Wednesday, 25 November 2020

ஜனாஸா எரிப்பு: ஹக்கீமும் நாடாளுமன்றில் பேசி விட்டார்

 


இலங்கையில் தொடரும் ஜனாஸா எரிப்பு விவகாரம் சமூகத்தின் ஒரு பகுதியினரை அதிர்ச்சிக்குள்ளாக்கி வேறுபடுத்தித் தள்ளப்படுவதாகவும் உணர்வதாக நாடாளுமன்றில் இன்று தெரிவித்துள்ளார் முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவுப் ஹக்கீம்.


நீச்சல் குளத்தில் தேங்கியிருக்கும் தண்ணீர் ஊடாகக் கூட கொரோனா வைரஸ் பரவாது என உலக சுகாதார அமைப்பு மீண்டும் தெளிவுபடுத்தியுள்ள நிலையில் இலங்கையில் எவ்வித விஞ்ஞான அடிப்படையுமில்லாமல் இவ்வாறு உடலங்கள் எரிக்கப்படுவதை அரசு மீள் பரிசீலனை செய்ய வேண்டும் என அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.


இஸ்லாமிய நாடுகளின் கூட்டுறவுக்கான அமைப்பு, ஐ.நா வதிவிட பிரதிநிதி உட்பட பலரும் இது குறித்துப் பேசியும் அரசு இவ்விவகாரத்தில் தொடர்ந்தும் மெளித்திருப்பதாகவும் தமது முடிவை மாற்றிக் கொள்ள வேண்டும் எனவும் 'தாழ்மையான' வேண்டுகோளை அவர் முன் வைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment