குற்றவாளியாகக் கண்டால் தண்டனைக்குத் தயார்: மைத்ரி - sonakar.com

Post Top Ad

Wednesday, 25 November 2020

குற்றவாளியாகக் கண்டால் தண்டனைக்குத் தயார்: மைத்ரி

 


ஈஸ்டர் தாக்குதல் சம்பவத்தின் பின்னணியில் தாம் குற்றவாளியாகக் காணப்பட்டால் தண்டனையை ஏற்றுக் கொள்ளத் தயார் என்கிறார் முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன.


ஜனாதிபதியாக குறித்த தாக்குதல் சம்பவத்தைத் தன்னால் தடுத்து நிறுத்தியிருக்க முடியாது எனவும் அது பாதுகாப்பு தரப்பினரின் பொறுப்பாகவே இருந்தது எனவும் விளக்கமளித்துள்ள அவர், குற்றப்புலனாய்வுப் பிரிவுனரும் பொறுப்புக் கூற வேண்டியவர்கள் என தெரிவித்துள்ளார்.


ஜனாதிபதி ஆணைக்குழுவுக்கு பல தடவைகள் சமூகமளித்துள்ள மைத்ரி, இன்றைய விசாரணையின் போதே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment