சவுதி அரேபியா, ஜித்தாவில் உள்ள மாற்று மதத்தவர்களுக்கான மையவாடியொன்றில் இடம்பெற்ற குண்டு வெடிப்பினால் இருவர் காயமடைந்த சம்பவம் இன்று இடம்பெற்றுள்ளது.
முதலாவது உலக மகா யுத்த நினைவு நிகழ்வொன்றில் பல வெளிநாடுகளின் ராஜதந்திரிகள், பிரதிநிதிகள் கலந்து கொண்டிருந்த நிகழ்விலேயே இக்குண்டு வெடிப்பு இடம்பெற்றுள்ளதுடன் அதனையடுத்து பிரதேசத்தில் பாதுகாப்பு நடவடிக்கைகள் பலப்படுத்தப்பட்டுள்ளது.
கிரேக்க தூதரக ஊழியர் ஒருவரும் சவுதி பாதுகாப்பு அதிகாரியொருவரும் காயமுற்றதாக தெரிவிக்கப்படுகிறது.
No comments:
Post a Comment