வாயடைக்கும் வகையில் 'வியூகம்': நசீர் அஹமத் சவால்! - sonakar.com

Post Top Ad

Sunday, 1 November 2020

வாயடைக்கும் வகையில் 'வியூகம்': நசீர் அஹமத் சவால்!

 


20ம் திருத்தச் சட்டத்துக்குத் தாம் ஆதரவளித்ததன் பின்னணியில் சிறப்பான வியூகம் இருப்பதாகவும் அவற்றை வெளியிட்டதும் விமர்சிப்பவர்கள் வாயடைத்துப் போவார்கள் என தெரிவிக்கிறார் நசீர் அஹமது.


கொரோனாவின் சூழலில், முஸ்லிம் சமூகம் எதிர்கொண்டுள்ள சமய நம்பிக்கைகள் மீதான கெடுபிடிகளைக் கருத்தில் கொள்ளாமல் முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் 20ஐ ஆதரிக்கவில்லையெனவும் தமது வியூகம் வெற்றியளிக்கும் எனவும் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.


எதிர்க்கட்சியின் கூட்டு முடிவை மீறி அரசுக்கு ஆதரவளித்ததன் ஊடாக பாரிய அவப்பெயரைப் பெற்றுள்ள நிலையில் நசீர் அஹமது இவ்வாறு விளக்கமளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


No comments:

Post a Comment