'வினா எழுப்பும்' சுதந்திரமும் பறிக்கப்படுகிறது: சஜித் குற்றச்சாட்டு! - sonakar.com

Post Top Ad

Saturday 21 November 2020

'வினா எழுப்பும்' சுதந்திரமும் பறிக்கப்படுகிறது: சஜித் குற்றச்சாட்டு!

 


நாடாளுமன்றில் எதிர்க்கட்சி உறுப்பினர்களின் வினா எழுப்பும் சுதந்திரமும் பறிக்கப்படுவதாக குற்றஞ்சாட்டியுள்ளார் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச.


இன்றைய சபை அமர்வில் கொரோனா கள நிலை தொடர்பில் சஜித் கேள்வியெழுப்ப முனைந்த போதிலும், ஏலவே இது தொடர்பில் நாடாளுமன்றில் பல தடவை பேசப்பட்டிருப்பதனால் இன்றைய வரவு - செலவு திட்ட விவகாரத்தில் கவனம் செலுத்துமாறு சபாநாயகர் தெரிவித்திருந்தார்.


இந்நிலையிலேயே, இக்குற்றச்சாட்டை வெளியிட்ட சஜித், இதற்கு முன் எப்போதும் கொரோனா தடுப்பூசி விவகாரத்தை சபையில் பேசியதில்லையென சுட்டிக்காட்டி, மக்கள் வீதிகளில் செத்து விழுந்த பின்னர் இவ்வாறான கேள்விகளைக் கேட்க முடியாது என தெரிவித்திருந்தார்.


இதன் போது கருத்துரைத்த லக்ஷ்மன் கிரியல்ல, யுத்த காலத்தில் தினசரி யுத்தம் தொடர்பில் நாடாளுமன்றில் கலந்துரையாடப்பட்டிருப்பதாகவும் கொரோனா அபாயம் இன்னும் முடியாத நிலையில் அது தொடர்பில் அரசு மேற்கொள்ளும் நடவடிக்கைகளைக் கேள்விக்குட்படுத்துவது எவ்வாறு தவறாகும்? எனவும் தெரிவித்த நிலையில் சூடான வாத விவாதங்கள் பரிமாறப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment