கிளிநொச்சி மாவட்டத்தில் கொரோனா தொற்றாளர் கண்டறியப்பட்டுள்ளதன் பின்னணியில் அங்கு அனைத்து பாடசாலைகளையும் மீண்டும் மூடுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
நேற்றைய தினமே பாடசாலைகள் ஆரம்பிக்கப்பட்டிருந்த நிலையில் வட மாகாணத்தில் 47 வீத மாணவர் வரவே பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை, பாடசாலை மாணவர்களுக்காக ஒழுங்கு செய்யப்பட்டுள்ள விசேட போக்குவரத்து ஏற்பாடுகளும் விதி முறைகளை மீறி செயற்படுவதாக சுட்டிக்காட்டப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment