உயிர்களைப் பாதுகாப்பதில் அரசு கூடிய கவனம்: முசம்மில் - sonakar.com

Post Top Ad

Tuesday 24 November 2020

உயிர்களைப் பாதுகாப்பதில் அரசு கூடிய கவனம்: முசம்மில்

 


பொருளாதார ரீதியில் பாதிப்புக்கள் ஏற்பட்டாலும், பொதுமக்களின் உயிர்களைப் பாதுகாப்பதில் அரசு கூடிய கவனம் செலுத்தியுள்ளதாக ஊவா மாகாண ஆளுநர் ஏ.ஜே.எம். முஸம்மில் தெரிவித்துள்ளார்.


ஊவா மாகாண விவசாய திணைக்களத்திற்குப் புதிதாக 65 தொழில்நுட்ப உதவியாளர்களை இணைத்துக் கொள்வதற்கான நியமனக் கடிதங்கள் வழங்கும் நிகழ்வு அண்மையில் ஊவா மாகாண சபை கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே ஆளுநர் இவ்வாறு தெரிவித்தார்.


அங்கு தொடர்ந்து உரையாற்றிய ஆளுநர்:

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ ஆட்சிக்கு வந்து ஒருவருடம் நிறைவுபெற்றுள்ளது. கடந்த ஒருவரிடத்தில் எதிர்பாரா விதமாக இலங்கை உட்பட முழு உலகும் கொவிட் 19 வைரஸ் தாக்கத்திற்கு முகங்கொடுக்க நேர்ந்தது.  வைரஸ் தொற்றுக்கு எதிரான போராட்டத்துடன் ஜனாதிபதியின் கொள்கையை நடைமுறைப்படுத்தும் 'நாட்டைக் கட்டியெழுப்பும் சுபீட்சத்தின் நோக்கு' வேலைத்திட்டத்தை வெற்றிகரமாக முன்னெடுத்து வருகிறது. இதன் பிரதான செயற்திட்டங்களின் ஒன்றான கிராமிய அபிவிருத்தி வேலைத்திட்டம் தற்பொழுது நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்படுகிறது. இந்த நாட்டை விவசாயத் துறையில் தன்னிறைவுடைய, செய்து யாரிடமும் கையேந்தாமல் வாழும் சமூகத்தை உருவாக்கக் கிராமிய அபிவிருத்தி வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.


விவசாய துறையின் அபிவிருத்தியில் விவசாய திணைக்களத்தின் பங்களிப்பு  அத்தியாவசியமானது. ஊவா மாகாணம் விவசாய துறையில் பிரதான இடத்தை வகிக்கும் ஒரு மாகாணம் ஆகும். இந்த மாகாணத்தில் உற்பத்தி செய்யப்படும்  மரக்கறி வகைகள் நாட்டின் மரக்கறி தேவையில் 70 சதவீதத்தைப் பூர்த்தி செய்கின்றன. அதேபோன்று சோளம் சுமார் 50 வீதமாலாவில் உற்பத்தி செய்யப்படுகிறது. இதனை மேலும் அபிவிருத்தி செய்ய எமக்கு  தொழிநுட்ப அறிவு மிகவும் அவசியமாகக் காணப்படுகிறது. அதற்குத் தேவையான தொழில்நுட்ப உதவியாளர்கள் இன்றைய தினம் புதிதாக இணைத்துக்கொள்ளப்படுகிறீர்கள். வளமான நாட்டை உருவாக்கும் ஜனாதிபதியின் செயற்திட்டத்திற்கு உங்களது சேவை பாரிய பங்களிப்பை வழங்கும் என ஆளுநர் மேலும் தெரிவித்தார்.


ஆளுநரின் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் ஊவா மாகாண பிரதான செயலாளர் P.B. விஜயரத்ன, ஊவா மாகாண அரச சேவைகள் ஆணைக்குழுவின் தலைவர் விஜித மல்லேஹேவா, ஆளுநரின் செயலாளர் நிஹால் குணரத்தன, ஊவா மாகாண அரச சேவைகள் ஆணைக்குழுவின் செயலாளர் காமினி, ஊவா மாகாண விவசாய திணைக்களத்தின் செயலாளர் திஸ்ஸ ஹாதியால்டேனிய, ஊவா மாகாண விவசாய திணைக்கள பணிப்பாளர் ஆயெஷாகுணவர்தன உள்ளிட்ட அதிகாரிகள் பலர் கலந்துகொண்டனர்.

No comments:

Post a Comment