பொத்துவில் முஹுது மகா விகாரையின் அபிவிருத்திப் பணிகளை முன்னெடுக்குமாறு உத்தரவிட்டுள்ளார் பிரதமர் மஹிந்த ராஜபக்ச.
இப்பகுதியில் உள்ள குடியேற்றங்கள் தொடர்பில் சர்ச்சைகள் எழுந்திருந்த நிலையில், விகாரைக்குச் சொந்தமான நிலப்பகுதிகளை அடையாளப்படுத்தி அதனைப் 'புனித பிரதேசமாக' அடையாளப்படுத்தி, தேவையான அனுமதியை வழங்குமாறு பிரதமர் உத்தரவிட்டுள்ளார்.
மேலும், இப்பகுதியின் பாதுகாப்புக்காக கடற்படைத் துணைப்பிரிவொன்றையும் அமைப்பதற்கான நடவடிக்கைகள் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment