ஜனாஸா எரிப்பு: இன்னும் உத்தியோகபூர்வ அறிவிப்பு இல்லாதது ஏன்? - sonakar.com

Post Top Ad

Tuesday 10 November 2020

ஜனாஸா எரிப்பு: இன்னும் உத்தியோகபூர்வ அறிவிப்பு இல்லாதது ஏன்?

  


கொரோனா வைரஸ் தாக்கத்தினால் உயிரிழக்கும் முஸ்லிம்களின் உடலங்களை புதைப்பதை அனுமதிப்பதற்கு அரசு இணக்கம் கண்டுள்ள போதிலும் அதற்கான உத்தியோகபூர்வ அறிவிப்பு எதுவும் இதுவரை வெளியாகாததால் தொடர்ந்தும் குழப்ப நிலை நிலவுகிறது.


அடக்க 'அனுமதிப்பதற்கு' இணக்கம் தெரிவித்திருப்பதானது , மேலதிக பரிசோதனைகள் மற்றும் அவற்றின் முடிவுகளின் அடிப்படையிலேயே என்பதால், முஸ்லிம்கள் செறிந்து வாழும் பிரதேசங்களில் உள்ள மையவாடிகளை தேர்ந்தெடுப்பது, வரட்சியான நிலப்பகுதியிலுள்ள மையவாடிகளை தேர்ந்தெடுப்பது அல்லது ஏனைய இடங்களில் உள்ள பூமிக்கடியிலான நீர் அளவுகளைப் பரிசோதித்து முடிவெடுப்பது போன்ற நிபந்தனைகளுக்குட்பட்டது என அறியமுடிகிறது.


கொழுமபின் முஸ்லிம் மையவாடிகளுக்கான மண் பரிசோதனை நடவடிக்கைகள் நேற்றைய தினம் இடம்பெற்றுள்ள அதேவேளை ஏனைய இடங்கள் தொடர்பிலும் மேலதிக ஆய்வுகளுக்கான ஆயத்தங்கள் இடம்பெறுவதாக அறிய முடிகிறது. இந்நிலையிலேயே, தற்சமயம் உத்தியோகபூர்வ அறிவிப்புகள் எதுவும் வெளியாகவில்லையென சம்பந்தப்பட்ட தரப்பினரிடம் வினவிய போது சோனகர்.கொம்முக்கு விளக்கமளிக்கப்பட்டுள்ளது.


இப்பின்னணியிலேயே, தற்போது ஜனாஸாக்களை அடக்குவதற்கான அனுமதி தொடர்பில் சுகாதார அதிகாரிகள் மறுப்பு வெளியிட்டுள்ளமையும் எதிர்வரும் நாட்களுக்குள் உத்தியோகபூர்வ அறிவிப்பு எதிர்பார்க்கப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment