லலித் - அனுஷ குற்றமற்றவர்கள் என தீர்ப்பு! - sonakar.com

Post Top Ad

Thursday 19 November 2020

லலித் - அனுஷ குற்றமற்றவர்கள் என தீர்ப்பு!

 


2014 காலப்பகுதியில் அரச நிதியை துஷ்பிரயோகம் செய்து சில் துணி விநியோகம் செய்ததாக கடந்த ஆட்சியில் நீதிமன்றில் குற்றவாளிகளாகக் காணப்பட்டிருந்த முன்னாள் ஜனாதிபதி செயலாளர் லலித் வீரதுங்க மற்றும் முன்னாள் தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்தின் பணிப்பாளர் அனுஷ பெல்பிட்ட, குற்றமற்றவர்கள் என இந்த ஆட்சியில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.


குறித்த விவகாரத்தினை விசாரித்த மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று இத்தீர்ப்பை வழங்கியுள்ளதுடன் அனைத்து குற்றச்சாட்டுகளிலிருந்தும் குறித்த நபர்களை விடுவித்துள்ளது.


கடந்த ஆட்சியில் இருவரும் குற்றவாளிகளாகக் காணப்பட்டு சிறைத்தண்டனை வழங்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment