கடலில் குதித்து பலியாகவும் தயார்: பவித்ரா! - sonakar.com

Post Top Ad

Tuesday, 3 November 2020

கடலில் குதித்து பலியாகவும் தயார்: பவித்ரா!

 


கொரோனா பரவலைத் தடுப்பதற்கு விசேட வழிபாட்டில் ஈடுபட்டிருந்த அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சிக்கு எதிராக விமர்சனங்கள் வெளியிடப்பட்டு வரும் நிலையில் தான் கடலில் குதித்து உயிரை மாய்ப்பதால் கொரோனா பரவலைத் தடுக்கலாம் என்றால் அதைச் செய்யவும் தான் தயார் என தெரிவிக்கிறார்.


பவித்ரா, கம்மன்பில மற்றும் பிரசன்ன ரணதுங்க ஆகியோர் இவ்வழிபாட்டு நடவடிக்கைகளில் ஈடுபட்டு அதற்கான பண்டங்களை நதிகளில் வீசியெறிந்திருந்தனர். இந்நிலையில் நேற்றைய தினம் டொல்பின்கள் கரையொதுங்கிய சம்பவத்துடன் தொடர்பு படுத்தி அமைச்சர்களுக்கு எதிரான விமர்சனங்கள் வெளியிடப்பட்டு வருகின்றன.


இதற்குப் பதிலளிக்குமுகமாகவே பவித்ரா தான் கடலில் குதித்து உயிர்த்தியாகம் செய்யவும் தயார் என தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment