கொரோனா வைரஸ் பாதிப்பினால் உயிரிழப்போரின் உடலங்களை அடக்கம் செய்ய இலங்கையில் அனுமதி மறுக்கப்படுகின்றமை தொடர்பில் ஐ.நா அவதானம் செலுத்தியுள்ளதாகவும் அரசாங்கம் இம்முடிவை மீள் பரிசீலிக்கவுள்ளது தொடர்பில் அறிந்தமை மகிழ்ச்சி தருவதாகவும் பிரதமர் மஹிந்த ராஜபக்சவுக்கு கடிதம் மூலம் தெரிவித்துள்ளார் இலங்கைக்கான ஐ.நா வதிவிட ஒருங்கமைப்பாளர் ஹனா சிங்கர்.
செப்டம்பர் 20ம் திகதி மீளுறுதி செய்யப்பட்ட உலக சுகாதார அமைப்பின் வழிகாட்டலுக்கமைவாக இறந்த உடலங்கள் ஊடாக வைரஸ் பரவுவதற்கான சாத்தியக்கூறு எதுவுமில்லையெனவும் அடக்கம் செய்ய அனுமதிப்பதால் பாதுகாப்பு பிரச்சினைகள் எதுவுமில்லையெனவும் அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்நிலையில், முஸ்லிம் சமூகத்திலிருந்தும் வெளியிலிருந்தும் தமக்கு இது தொடர்பில் பல தரப்பட்ட கோரிக்கைகள் முன் வைக்கப்பட்டிருப்பதாகவும் இவ்விவகாரம் சமூக நல்லிணக்கத்தை பாதிக்காத வகையில் தீர்வு காணப்பட வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment