ஜனாஸாக்களை அடக்க அனுமதிக்க அரசாங்கம் இணக்கம்! - sonakar.com

Post Top Ad

Monday, 9 November 2020

ஜனாஸாக்களை அடக்க அனுமதிக்க அரசாங்கம் இணக்கம்!

 



கொரோனா தொற்றுக்குள்ளாகி உயிரிழக்கும் முஸ்லிம்களின் ஜனாஸாக்களை அடக்க அனுமதிப்பதற்கு அரச உயர் மட்டம் அனுமதியளித்துள்ளதாக அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா தலைவர் அஷ்ஷெய்க் ரிஸ்வி முப்தி தெரிவித்துள்ளார்.


இது தொடர்பில் சற்று முன்னர் அவரைத் தொடர்பு கொண்டு விளக்கம் கோரிய போது, அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக நீதியமைச்சர் தனக்கு அறிவித்துள்ளதாகவும், தான் வெளியிட்டுள்ள ஒலிப்பதிவில் 'தபன்' செய்ய அனுமதித்திருப்பதாகத் தான் தெரிவித்ததானது ஜனாஸாவை அடக்குவதையே குறிக்கும் எனவும் அவர் விளக்கமளித்தார்.


நீண்ட முயற்சிகளின் பின்னர் தற்போது அரசு இணங்கியுள்ள அதேவேளை, ஆரம்பத்தில் மன்னாரில் அடக்குவதற்கான இணக்கம் காணப்பட்டுள்ள போதிலும் மாற்று இடங்கள் குறித்தும் ஆலோசிப்பதாக ரிஸ்வி முப்தி சோனகர்.கொம்மிடம் மேலும் தகவல் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment