வெல்லம்பிட்டி பகுதியில் கொரோனா தொற்றுக்குள்ளானதாக இனங்காணப்பட்ட இருவர் தப்பியோடி கொழும்பு துறைமுகத்துக்குள் ஒளிந்திருந்த நிலையில் தேடிக் கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர்.
முகாம்களுக்கு அழைத்துச் செல்லப்பட முன் வீடுகளில் தனிமைப்பட்டிருக்குமாறு அறிவுறுத்தப்பட்டிருந்த நிலையில் குறித்த நபர்கள் தப்பியோடியுள்ளதாகவும் பின்னர் தேடிக் கண்டுபிடித்து சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
கொரோனா தொற்றுக்குள்ளான 16226 பேர் இதுவரை குணமடைந்துள்ளதாக அரசாங்கம் தகவல் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment