கொரோனா; அரசுக்கு இதுவரை 7000 கோடி செலவு; பிரதமர் - sonakar.com

Post Top Ad

Thursday, 12 November 2020

கொரோனா; அரசுக்கு இதுவரை 7000 கோடி செலவு; பிரதமர்

 


கொரோனா முகாமைத்துவ நடவடிக்கைகளால் அரசுக்கு இதுவரை 7000 கோடி ரூபா செலவாகியுள்ளதாக கணக்கு வெளியிட்டுள்ளார் பிரதமர் மஹிந்த ராஜபக்ச.


வரவு செலவுத் திட்ட உரையிலேயே இவ்வாறு தெரிவித்துள்ள அவர், இலங்கையின் பொருளாதார வளர்ச்சி எதிர்மறையில் இருப்பதாகவும் தொற்றாளர்களை அடையாளங்காணல், தனிமைப்படுத்தல், பரிசோதனைக்குட்படுத்தல் மற்றும் சேம நலன் நடவடிக்கைகளாக இத்தொகை செலவாகியிருப்பதாக விளக்கமளித்துள்ளார்.


நாட்டின் பொருளாதார நிலை மிக மோசமாக இருப்பதாகவும் பற்றாக்குறை வெகுவாக அதிகரித்துள்ளதாகவும் தனதுரையில் அவர் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment