நேற்றும் 13 மாவட்டங்களிலிருந்து தொற்றாளர்கள்! - sonakar.com

Post Top Ad

Thursday, 12 November 2020

நேற்றும் 13 மாவட்டங்களிலிருந்து தொற்றாளர்கள்!

 


நேற்றைய தினம் நாடளாவிய ரீதியில் 635 தொற்றாளர்கள் கண்டறியப்பட்டுள்ள நிலையில் அதில் 264 பேர் கொழும்பிலிருந்தும் 136 பேர் கம்பஹாவைச் சேர்ந்தவர்கள் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.


இந்நிலையில், மேல் மாகாணத்தை விட்டு ஏனைய இடங்களுக்கு செல்வதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளதுடன் மீறுபவர்கள் கட்டாய 14 நாள் தனிமைப்படுத்தலுக்குள்ளாக்கப்படுவர் என விளக்கமளிக்கப்பட்டுள்ளது.


நேற்றைய தினம் கண்டி, காலி, புத்தளம் உட்பட 13 மாவட்டங்களிலிருந்து தொற்றாளர்கள் கண்டறியப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment