ஒக்டோபர் 4ம் திகதியிலிருந்து அறிவிக்கப்பட்டு வரும் இரண்டாவது சுற்று கொரோனா பரவலால் இதுவரை கொழும்பிலிருந்து 5127 தொற்றாளர்கள் அடையாளங் காணப்பட்டுள்ளனர்.
இதேவேளை, கம்பஹாவிலிருந்து 4917 பேரும் களுத்துறையிலிருந்து 595 பேரும் தொற்றுக்குள்ளாகியுள்ளதாக புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன.
மார்ச் மாதம் முதல் நாட்டில் 16583 தொற்றாளர்கள் இதுவரை கண்டறியப்பட்டுள்ள அதேவேளை அதில் 11324 பேர் குணமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்நிலையில், தொடர்ந்தும் 5206 பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment