5000 ரூபாவில் ஒரு மாதம் வாழ முடியாது: சஜித் - sonakar.com

Post Top Ad

Tuesday, 24 November 2020

5000 ரூபாவில் ஒரு மாதம் வாழ முடியாது: சஜித்

 


அரசு வழங்கும் 5000 ரூபாவை வைத்துக் கொண்டு மாதமொன்றுக்கு குடும்ப வாழ்க்கையைக் கொண்டு செல்ல முடியும் என்று எதிர்பார்ப்பது நெஞ்சில் ஈரமில்லாத செயல் என தெரிவிக்கிறார் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச.


வரவு - செலவுத்திட்டம் மீதான இன்றைய விவாதத்தில் உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்த சஜித், 5000 ரூபாவை ஒரு மாதத்துக்குப் பிரித்து வாழ்க்கையை நடாத்துமாறு கூறுவது ஏற்புடையதன்று என தெரிவித்திருந்தார்.


அரசு வழங்கும் 5000த்தை மக்கள் ஒரே வாரத்தில் செலவு செய்வதாகவும் அது ஒரு மாத காலத்துக்கன கொடுப்பனவெனவும் அண்மையில் அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment