கொரோனா தடுப்பூசி விநியோகம் ஆரம்பித்ததும் இலங்கையில் 20 வீத மக்களுக்கு அதனை வழங்குவதற்கான வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியிட்டுள்ளார் சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி.
இதுவரை தடுப்பூசி கிடைப்பதற்கான தேதி முடிவாகவில்லையாயினும் இதனை செயற்படுத்தத் தேவையான குழுவொன்று அமைக்கப்பட்டிருப்பதாகவும் தகவல் வெளியிட்டுள்ள அவர், தடுப்பூசிகள் கிடைக்கப் பெற்றதும் முதற் சுற்றில் 42 லட்சம் பேருக்கு வழங்கவுள்ளதாக தெரிவிக்கிறார்.
உலக அளவில் தடுப்பூசிகள் சம அளவில் வழங்கப்படுவதை உறுதி செய்யும் நிமித்தம் என்ற அமைப்பும் உருவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment