கொரோனா தொற்றினால் பாதிப்படைந்து வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வந்த வாழைச்சேனையைச் சேர்ந்த 20க்கும் மேற்பட்டோர் குணமடைந்த நிலையில் வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக சுகாதாரப் பிரிவினர்கள் தெரிவித்தனர்.
கோறளைப்பற்று மத்தி வாழைச்சேனை சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகப் பிரிவில் நாளாந்தம் கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டு வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருவதோடு, அவர்களில் சிலர் சிகிச்சையின் பின்னர் வீடுகளுக்குச் சென்றுள்ளனர்.
இவ்வாறு சிகிச்சை முடிந்து வீடுகளுக்கு வந்த நபர்கள் வைத்தியர்கள் வழங்கிய ஆலோசனைகளின் பிரகாரம் நடந்து கொள்ளும் படியும், மீண்டும் பதினான்கு நாட்கள் தனிமைப்படுத்தலில் இருக்குமாறு வேண்டப்பட்டுள்ளனர்.
-எச்.எம்.எம்.பர்ஸான்
No comments:
Post a Comment