2 வருடங்களில் 5000 பில்லியன் கடன்; அரசு 'பெயில்' : விஜித - sonakar.com

Post Top Ad

Friday 20 November 2020

2 வருடங்களில் 5000 பில்லியன் கடன்; அரசு 'பெயில்' : விஜித

  


கடந்த ஆட்சியில் ஐந்து வருடங்களில் கூட்டாட்சியினர் பெற்றுக் கொண்ட கடன் தொகை ஆறாயிரம் பில்லியன் ரூபா என தெரிவிக்கப்படுகின்ற நிலையில் நடைமுறை அரசு இரண்டு வருடங்களில் 5000 பில்லியன் ரூபா கடனை அடைய முயற்சிப்பது அரசின் வியூகங்கள் பிழைத்திருப்பதை சுட்டிக்காட்டுகிறது என தெரிவிக்கிறார் ஜே.வி.பி நாடாளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத்.


2020ம் ஆண்டு மாத்திரமே அரசு 2000 பில்லியன் ரூபா கடனைப் பெற்றுள்ளதாகவும் அடுத்த வருடத்திற்குள் அதனை 5000 பில்லியன் ரூபாவாக மாற்றி கடன் சுமையை அதிகரிக்கத் திட்டமிட்டுள்ளதாகவும் அவர் விளக்கமளித்துள்ளார்.


அதற்கு முந்தைய மஹிந்த ஆட்சியின் கடன்களை அடைக்கவே தாம் கடன் பெறுவதாகக் ரணில் - மைத்ரி கூட்டரசு தெரிவித்து வந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment