எதிர்க்கட்சியில் இருந்து கொண்டு அரசுக்கு ஆதரவாக வாக்களித்து தாவிய ஹாபிஸ் நசீர் அஹமதை பணம் தருகிறோம் போகாதே என அவரின் எதிர்க்கட்சித் தோழர்கள் கேலிக்குள்ளாக்கிய காணொளி வெளியாகியுள்ளது.
முதற்தடவையாக நாடாளுமன்றம் சென்றுள்ள நசீர் அஹமட் பெருந்தொகை பணம் செலவழித்ததாக அவரது அரசியல் போட்டியாளர்கள் தொடர்ச்சியாக குற்றஞ்சாட்டி வந்த அதேவேளை அதனை ஈடு செய்யும் வகையில் அவர் ஆளுங்கட்சிக்குத் தாவக்கூடும் என்ற எதிர்பார்ப்பு அண்மைக்காலமாக நிலவி வந்தது.
இந்நிலையில் இன்று 20க்கு ஆதரவளித்து பேசியதன் ஊடாக அனைவரது பார்வையும் ஹாபிஸ் நசீர் மீது விழுந்திருந்த அதேவேளை, அவரோடு சேர்ந்து, ஹரீஸ், பைசால் காசிம், எம்.எஸ் தௌபீக், அலிசப்ரி ரஹீம், இஷாக் ரஹ்மான் ஆகியோரும் குறித்த சட்டத்திருத்தத்துக்கு ஆதரவாக வாக்களித்திருந்தனர்.
எனினும், இரு முஸ்லிம் கட்சிகளதும் தலைவர்கள் எதிர்த்து வாக்களித்திருந்தனர். இது குறித்தும் சமூக மட்டத்தில் பல்வேறு சந்தேகங்கள் வெளியிடப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
1 comment:
என்னதான் இருந்தபோதிலும் தமிழ் தேசியக் கூட்டமைப்பிடம் இருந்து கற்க வேண்டிய எத்தனையோ விடயங்கள் முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு இன்னமும் இருக்கின்றன.. சமூகத்தின் மானத்தையும் மரியாதையையும் காக்க வேண்டும் என்ற சிந்தனை அவரகளுக்கு இல்லாமல் போனது வியப்புக்குரிய விடயமல்ல. பதவியும் பொருளும்தான் அவரகளுக்கு முக்கியம் எனில் கடந்த பொதுத் தேர்தலில் மொட்டுவின் பக்கமே நின்றிருந்து அவரகளுடைய ஆசைகளையும் நிறைவேற்றி முஸ்லிம் மக்களுக்கு இந்த இடைக்காலத்தில் ஏற்பட்டுள்ள அவமானங்களையும் போக்கி இருக்கலாம் அல்லவா?
Post a Comment