ரிசாடோடு எந்த டீலும் இல்லை: ஜனாதிபதி! - sonakar.com

Post Top Ad

Sunday, 4 October 2020

ரிசாடோடு எந்த டீலும் இல்லை: ஜனாதிபதி!

 


ரிசாத் பதியுதீனோடு அரசுக்கு எந்த டீலும் இல்லையென்று விசேட மறுப்பறிக்கை வெளியிட்டுள்ளார் ஜனாதிபதி கோட்டாபே ராஜபக்ச.


ரிசாத் - ராஜபக்ச குடும்பம் மீள உறவாட ஆரம்பித்துள்ளதாகவும் அதன் பின்னணியிலேயே ஈஸ்டர் தாக்குதல் விவகாரத்தில் கைதான ரிசாதின் சகோதரன் ரியாஜ் விடுதலையானதாகவும் அரசியல் குற்றச்சாட்டுகள் வெளியிடப்படுகின்ற அதேவேளை 20ம் திருத்தச் சட்டத்துக்கு ரிசாத் தரப்பு ஆதரவளிப்பதற்குப் பகரமாக டீல் நடந்திருப்பதாக அரசியல் மட்டத்தில் பேச்சு நிலவுகிறது.


இப்பின்னணியிலேயே ஜனாதிபதி இவ்வாறு விசேட மறுப்பறிக்கையொன்றை வெளியிட்டுள்ளதுடன் அதிகாரிகள் தவறு செய்திருந்தால் அதனை விசாரித்து நடவடிக்கை எடுக்கப் போவதாகவும் விளக்கமளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment