களனி பல்கலைக்கு ஒரு வார கால விடுமுறை - sonakar.com

Post Top Ad

Sunday, 4 October 2020

களனி பல்கலைக்கு ஒரு வார கால விடுமுறை

 


கம்பஹா, திவுலபிட்டிய பெண்ணொருவர் கொரோனா தொற்றுக்குள்ளானதையடுத்து பிராந்தியத்தில் பல்வேறு முன்னெச்கரிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.


இப்பின்னணியில், களனி பல்கலைக்கழகம் மற்றும் கம்பஹாவில் இயங்கும் விக்ரமாராச்சி ஆயுர்வேத கல்வி நிலையமும் ஒரு வார காலத்துக்கு மூடப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.


அத்துடன் மஹர மற்றும் நீர்கொழும்பு சிறைச்சாலைகளுக்கும் ஒரு வார காலத்துக்கு வெளியார் அனுமதிக்கப்பட மாட்டார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment