அமெரிக்கா - இந்தியாவைப் போன்ற சமூக மட்டத்திலான கொரோனா தொற்று இலங்கையில் இல்லையென தெரிவிக்கிறார் அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி.
மினுவங்கொட கொரோனா கொத்தனி நாட்டின் பல்வேறு இடங்களுக்குப் பரவியுள்ள அதேவேளை எப்போது ஆரம்பமானது என்பது தொடர்பில் சந்தேகம் நிலவுகிறது. இந்நிலையில், பல இடங்களில் மக்கள் மத்தியில் அச்சம் நிலவுகின்ற பின்னணியில் தற்போதைய நிலவரம் குறித்து அமைச்சர் இவ்வாறு விளக்கமளித்துள்ளார்.
இதேவேளை, மக்கள் வீணாகப் பதற்றப்படத் தேவையில்லையென தொற்று நோய் விஞ்ஞான பிரிவின் பிரதானியும் தெரிவிக்கின்றமையும் தற்சமயம் 1204 பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment