20; உச்ச நீதிமன்ற 'முடிவை' 20ம் திகதி அறிவிப்பேன்: யாப்பா - sonakar.com

Post Top Ad

Saturday, 10 October 2020

20; உச்ச நீதிமன்ற 'முடிவை' 20ம் திகதி அறிவிப்பேன்: யாப்பா

 


20ம் திருத்தச் சட்டததுக்கு எதிரான மனுக்கள் மீதான உச்ச நீதிமன்றின் முடிவு தமது அலுவலகத்துக்கு 'பாதுகாப்பான' முறையில் கிடைக்கப் பெற்றுள்ளதாகவும் அதனை திங்களன்று திறந்து பார்த்து விட்டு 20ம் திகதி சபையில் அறிவிக்கப் போவதாகவும் தெரிவிக்கிறார் சபாநாயகர் யாப்பா.


தமக்கு மட்டுமே திறக்க அதிகாரம் உள்ள குறித்த கடிதம் நேற்று பிற்பகல் தமது அலுவலகத்தை வந்தடைந்துள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.


அரசின் உத்தேச 20ம் திருத்தச் சட்ட வரைபுக்கு எதிராக 39 வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளதுடன் அபிப்பிராய வாக்கெடுப்பு நடாத்தப்பட வேண்டும் என வலியுறுத்தப்பட்டிருந்தமை நினைவூட்டத்தக்கது.

No comments:

Post a Comment