நாளை முதல் நாடளாவிய ரீதியிலான ஊரடங்கு அமுலுக்கு வரவுள்ளதாக சமூக வலைத்தளங்களில் வதந்தி பரப்பப்படுவதாக எச்சரித்துள்ளது ஜனாதிபதி ஊடக பிரிவு.
திவுலபிட்டியவில் பெண்ணொருவர் கொரோனா தொற்றுக்குள்ளானதையடுத்து அப்பகுதியில் ஊரடங்கு அமுலில் உள்ள அதேவேளை பிரதான ஊடகங்கள் இச்செய்தியை வெளியிட்டு வரும் விதம் மக்கள் மத்தியில் பதற்றத்தை உருவாக்கியுள்ளது.
இந்நிலையில், நாளை முதல் நாடளாவிய ரீதியில் ஊரடங்கு எனவும் வதந்தி பரவுகின்றமையும் அதனை அரசு மறுத்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment