ஈஸ்டர் தாக்குதல்தாரிகள் மற்றும் திட்டங்கள் தொடர்பில் முன் கூட்டியே புலனாய்வுத் தகவல்கள் கிடைத்ததாக தெரிவிக்கப்படுகின்றது. ஆயினும், அது தொடர்பில் ஒரு தொலைபேசி அழைப்பூடாக சிறு தகவல் தந்திருந்தாலும் தன்னால் தாக்குதல்களைத் தவிர்த்திருக்க முடியும் என்கிறார் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன.
தாக்குதல் நடந்த வேளையில் தாம் சிங்கப்பூரில் மருத்துவ சிகிச்சை பெற்றுக் கொண்டிருந்ததாகவும் சிகிச்சை முடிந்து வெளியே வந்த பின்னரே தமக்குத் தகவல் சொல்லப்பட்டதாகவும் அவர் ஜனாதிபதி ஆணைக்குழுவிடம் சாட்சியமளித்துள்ளார்.
விடயம் கேள்வியுற்றவுடன் ஜனாதிபதி செயலாளர், பிரதமர், பாதுகாப்பு செயலாளர் என அனைவரையும் தொடர்பு கொண்டு தக்க நடவடிக்கை எடுக்குமாறு தாம் உத்தரவிட்டிருந்ததாகவும் முன் கூட்டியே தெரிந்திருந்தால் தாக்குதலைத் தவிர்க்க நடவடிக்கை எடுத்திருக்கலாம் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment