ரிசாதுக்கு உதவியவர்களுக்கும் விளக்கமறியல் - sonakar.com

Post Top Ad

Monday, 19 October 2020

ரிசாதுக்கு உதவியவர்களுக்கும் விளக்கமறியல்

 


நாடாளுமன்ற உறுப்பினர் ரிசாத் பதியுதீன் ஒளிந்திருப்பதற்கு உதவியதன் பின்னணியில் கைதானவர்களுக்கும் ஒக்டோபர் 27ம் திகதி வரை விளக்கமறியல்  வழங்கப்பட்டுள்ளது.


அத்துடன் குறித்த நபர்களை பிரத்யேகமாக விசாரிப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாகவும் கலுபோவில பகுதியிலிருந்து அவரை தெஹிவளைக்கு வாகனத்தில் ஏற்றிச் சென்றது முதல் இடையில் ரிசாத் பதியுதீன் தங்கியிருந்திருக்கக் கூடிய இடங்கள் தொடர்பிலும் ஆழமாக விசாரிக்கப் போவதாகவும் பொலிசார் விளக்கமளித்துள்ளார்.


இதேவேளை, ஈஸ்டர் தாக்குதலையடுத்து தலைமறைவாக இருந்த மது மாதவவை தாமே 35 நாட்கள் ஒளித்து வைத்திருந்ததாக நேற்றைய தினம் உதய கம்மன்பில உரிமை கோரியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment