மது மாதவவை ஒளித்த கம்மன்பிலவுக்கு எதிராக முறைப்பாடு - sonakar.com

Post Top Ad

Monday 19 October 2020

மது மாதவவை ஒளித்த கம்மன்பிலவுக்கு எதிராக முறைப்பாடு

 


பொலிசாரால் தேடப்பட்டு வந்த மது மாதவவை 35 நாட்கள் தாம் ஒளித்து வைத்திருந்ததாக பகிரங்கமாக நேற்றைய தினம் பெருமை பேசியிருந்த உதய கம்மன்பிலவுக்கு எதிராக சட்டத்தரணிகள் சங்கத்தில் (BASL) முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.


சட்டத்தரணியான உதய கம்மன்பிலவின் இந்த பேச்சு தொழில் தர்மத்துக்கு எதிரானது எனவும் இது கிரிமினல் விசாரணைக்குட்படுத்தப்பட வேண்டிய விடயம் எனவும் தெரிவித்து சட்டத்தரணிகள் சங்கத்திடம் எழுத்து மூலம் முறைப்பாடு செய்துள்ளார் சட்டத்தரணி செஹர ஹேரத்.


இந்நிலையில், இது தொடர்பில் கம்மன்பிலவிடம் விளக்கம் பெற வேண்டும் என தனது கடிதத்தில் அவர் கோரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment