பிரான்சில் அண்மையில் ஆசிரியர் ஒருவர் தலை துண்டிக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவத்தைத் தொடர்ந்து சற்று முன் நீஸ் நகரில் தேவாலயம் ஒன்றருகே இடம்பெற்ற கத்திக் குத்து தாக்கதலில் மூவர் உயிரிழந்துள்ளனர்.
உயிரிழந்த இருவரது சடலங்கள் தேவாலயத்துக்குள் மீட்கப்பட்டுள்ள அதேவேளை மேலும் ஒருவர் படுகாயமுற்றிருந்த நிலையில் உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
சம்பவம், தீவிரவாத தாக்குதல் என நீஸ் மேயர் தெரிவித்துள்ளமையும் கடந்த சில நாட்களாக முஸ்லிம்களுக்கு எதிரான வெறுப்பூட்டும் செயல்களை ஆதரித்துப் பேசுவதாக பிரெஞ்சு அதிபருடன் முஸ்லிம் நாடுகள் முரண்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment