பொத்துவில் பிரதேசத்தில் மேலும் இருவருக்கு கொரோனா - sonakar.com

Post Top Ad

Wednesday, 28 October 2020

பொத்துவில் பிரதேசத்தில் மேலும் இருவருக்கு கொரோனா

 


பேலியகொட கொரோனா கொத்தணியோடு தொடர்புபட்ட அறுவர் மீது மேற்கொள்ளப்பட்ட PCR பரிசோதனையில் ஐவருக்கு கொரோனா தொற்று ஊர்ஜிதமான நிலையில் மேலும் இருவருக்கு தொற்று உள்ளது என உறுதி செய்யப்பட்டுள்ளது.


கொரோனா தொற்றுக்கு உள்ளவர்களுடம் நேரடித் தொடர்பை பேணியவர்கள் மீது மேற்கொள்ளப்பட்ட PCR பரிசோதனையின் போதே இரு தொற்றாளர்களும் இனம் காணப்பட்டுள்ளனர்.


தொற்றுக்கு உள்ளான இருவரும் மேலதிக  சிகிச்சைக்காக பாலமுனை கொரோனா சிகிச்சை நிலயத்திற்கு அனுப்பபட்டுள்ளதாக பொத்துவில் பொது வைத்திய நிலையத் தகவல்கள் தெரிவிக்கின்றது.


- இர்ஷாத் ஜமால்

No comments:

Post a Comment