வவுனியா: மோட்டார் சைக்கிள் விபத்தில் இருவர் வபாத் - sonakar.com

Post Top Ad

Thursday, 8 October 2020

வவுனியா: மோட்டார் சைக்கிள் விபத்தில் இருவர் வபாத்

  


வவுனியா, ஹொரவ்பொத்தான பிரதான வீதியில் மடுகந்தைப் பகுதியில் வீதியை விட்டு விலகிய மோட்டர் சைக்கிள் மரத்துடன் மோதி விபத்துக்குள்ளானதில் இருவர் மரணமடைந்துள்ளனர்.


இன்று(08) மாலை 5.20 மணியளவில் இடம்பெற்ற இவ் விபத்து குறித்து மேலும் தெரியவருவதாவது, வவுனியாவில் இருந்து ஹொரவப்பொத்தான நோக்கி வேகமாக சென்ற மோட்டர் சைக்கிள் மழை காரணமாக வேகக் கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகி மரத்துடன் மோதி விபத்துக்குள்ளானது. குறித்த விபத்தில் மோட்டர் சைக்கிளில் பயணித்த இருவரது தலையிலும் பலத்த காயங்கள் ஏற்பட்ட நிலையில் உடனடியாக வவுனியா வைத்தியசாலைக்கு கொண்டு வரப்பட்டபோதும் அவர்கள் இருவரும் உயிரிழந்திருந்துள்ளனர். 


இதனையடுத்து இருவரது சடலங்களும் வவுனியா வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.


குறித்த விபத்து தொடர்பில் வவுனியா போக்குவரத்து பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளதுடன்இ குறித்த இருவரும் தலைக்கவசப் பட்டியை பூட்டாமல் சென்றமையாலயே தலையில் பலத்த காயங்கள் ஏற்பட்டு மரணம் நிகழ்ந்துள்ளதாக ஆரம்ப கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.


இவ்விபத்தில் மோட்டார் சைக்கிலின் சாரதியான ஹொரவ்பொத்தானஇ வீரச்சோலை கிரமத்தை சேர்ந்த 41வயதுடைய முஹமது மாகீர் என்பவரும் மற்றைய நபர் அதே பகுதியை சேர்ந்த முஹம்மது நியாஸ் என்பவருமே என பொலிஸாரினால் அடையாளம் கணப்பட்டுள்ளதுடன் மேலதிக விசாரணைகளை வவுனியா போக்குவரத்து பொலிசார் முன்னெடுத்து வருகின்றனர்.


- முஹம்மட் ஹாசில்

1 comment:

Mohammad Akram said...

innalillahiwainnailaihirojiun

Post a Comment