அரசின் உத்தேச 20ம் திருத்தச் சட்டத்தின் மீதான விவாதம் இன்றும் நாளையும் இடம்பெறவுள்ள நிலையில், தன்னால் ஜனாதிபதியாக முடியாததால், பிரதமராக இருந்து ரணில் தட்டிப் பறித்த அதிகாரங்களே மீளவும் ஜனாதிபதிக்கு வழங்கப்படுகிறது எனவும் மேலதிகமாக எந்த அதிகாரமும் சுவீகரிக்கப்படவில்லையெனவும் தெரிவிக்கிறார் நீதியமைச்சர் அலி சப்ரி.
உத்தேச சட்டத்திருத்தத்தின் சில சரத்துக்களை இரண்டாவது வாசிப்பின் போது அரசு திருத்தப் போவதாகவும் விளக்கமளித்துள்ள அவர், மக்கள் எண்ணங்களை பிரதிபலிக்கும் வகையில் மாற்றங்கள் வரும் எனவும் தெரிவிக்கிறார்.
நாளைய தினம் வாக்கெடுப்பு எதிர்பார்க்கப்படும் நிலையில் பெரும்பான்மையைத் தக்க வைத்துக் கொள்வதற்கா இறுதிக் கட்ட முயற்சிகளை அரசாங்கம் முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment