நான்கு மாதங்களுக்கு முன்பாக இலங்கை வந்து, தனிமைப்படல் நடவடிக்கைகளைப் பூர்த்தி செய்து நாடு திரும்புவதற்காக விமான நிலையம் சென்ற மாலைதீவு பிரஜையொருவருக்கு கொரோனா தொற்றிருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
விமான நிலையம் செல்ல முன்பதாக நடாத்தப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனை மூலமே குறித்த நபர் கொரோனாவால் பாதிக்ப்பட்டிருப்பது கண்டறியப்பட்டுள்ளதுடன் அவர் தங்கியிருந்த வீடு மற்றும் சென்று வந்த இடங்கள் தொடர்பில் விசாரணைகள் நடாத்தப்பட்டு தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக விளக்கமளிக்கப்பட்டுள்ளது.
இப்பின்னணியில் சுமார் 12 இடங்களைச் சேர்ந்தவர்கள் தனிமைப்படுத்தலுக்குட்படுத்தப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment