நாடாளுமன்ற உறுப்பினர் ரிசாத் பதியுதீனைக் கைது செய்ய ஆறு விசேட பொலிஸ் குழுக்களை களமிறக்கியுள்ளதாக தெரிவிக்கிறது குற்றப்புலனாய்வுப் பிரிவு.
முன்னதாக, அவருக்கு எதிராக பிடியாணை பிறப்பிக்கும்படி நீதிமன்றில் வேண்டப்பட்டிருந்த போதிலும் ரிசாத் மீதான தற்போதைய குற்றச்சாட்டுகளுக்கு பிடியாணை அவசியமில்லையென்பதால் அது மறுக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், அவரைக் கைது செய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வதாக பொலிசார் விளக்கமளித்துள்ளனர். 2019ம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலின் போது வாக்காளர்களை வாக்குச்சாவடிக்கு அழைத்துச் செல்ல 222 பஸ்களைப் பயன்படுத்தி பொது நிதிக்கு இழப்பை ஏற்படுத்தியிருப்பதாக ரிசாத் மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment