ரிசாதுக்கு ஒரு நீதி - மஹிந்தவுக்கு வேறு நீதி: மத்தும பண்டார - sonakar.com

Post Top Ad

Sunday, 18 October 2020

ரிசாதுக்கு ஒரு நீதி - மஹிந்தவுக்கு வேறு நீதி: மத்தும பண்டார

 


தேர்தல் ஆணைக்குழுவின் அனுமதி பெற்று வாக்காளர்களுக்கு போக்குவரத்து வசதி செய்து கொடுத்தது தவறெனக் கூறி நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரைக் கைது செய்ய முனையும் அரசாங்கம், 2015க்கு முன் மஹிந்த ராஜபக்ச அவ்வாறு செய்தமை மற்றும் இ.போ.ச வுக்கு செலுத்தாமல் விட்ட கட்டணங்கள் தொடர்பில் ஏன் நடவடிக்கையெடுக்கவில்லையென கேள்வியெழுப்பியுள்ளார் ரஞ்சித் மத்தும பண்டார.


ரிசாத் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டு சோடிக்கப்பட்டதெனவும் அவர் சஜித் பிரேமதாசவை தொடர்பு கொண்டு பேசுவதற்கு எந்த சட்டத்திலும் தடையில்லையெனவும் விளக்கமளித்துள்ள அவர், ஒரே நாட்டில் இரு வேறு நீதி இருப்பது வேடிக்கையானது என விளக்கமளித்துள்ளார்.


இதேவேளை, தேடப்படுவதாகக் கூறப்படும் ரிசாத் பதியுதீன் அரசின் முக்கிய உறுப்பினர் ஒருவரின் வீட்டிலேயே இருப்பதாக அநுர குமார திசாநாயக்க தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment