இரத்மலானை அரச வங்கிக் கிளை தற்காலிக பூட்டு - sonakar.com

Post Top Ad

Tuesday, 13 October 2020

இரத்மலானை அரச வங்கிக் கிளை தற்காலிக பூட்டு

 


பிரன்டிக்ஸ் நிறுவனத்தில் பணி புரிந்த நிலையில் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ள பெண்ணொருவரின் கணவன் தொழில் புரிந்த இரத்மலானை அரச வங்கிக்கிளையொன்று தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.


நேற்றைய தினம் கொழும்பில் கிளையும் மூடப்பட்டு பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டிருந்த அதேவேளை பிரன்டிக்ஸ் நிறுவனத்தின் கொல்லுப்பிட்டி அலுவலகத்தில் ஏழு பேருக்கு கொரோனா தொற்றிருப்பது பி.சி.ஆர் மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.


கம்பஹா மாவட்டத்தில் ஊரடங்கினை மேலும் தீவிரப்படுத்தும் நடவடிக்கைகளிலும் பாதுகாப்பு படையினர் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment