இந்த ஜனாஸாவையாவது காப்பாற்றுவார்களா? அசாத் கேள்வி! - sonakar.com

Post Top Ad

Sunday, 25 October 2020

இந்த ஜனாஸாவையாவது காப்பாற்றுவார்களா? அசாத் கேள்வி!

 


இலங்கையில் 16வது கொரோனா மரணம் நிகழ்ந்துள்ள  நிலையில், அரசுக்கு 20ம் திருத்தச் சட்டத்துக்கு ஆதரவளித்துள்ள முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்களால் ஜனாஸா எரிக்கப்படுவதிலுருந்து காப்பாற்ற முயற்சியெடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளார் முன்னாள் மேல் மாகாண ஆளுனர் அசாத் சாலி.


கொழும்பு - 2 ஸ்டுவர்ட் வீதியைச் சேர்ந்த 70 வயது சகோதரர் ஒருவரே வபாத்தாகியுள்ள நிலையில் அவர் குடியிருந்த பகுதியில் கொரோனா பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அறியமுடிகிறது.


அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையிலேயே குறித்த சகோதரர் வ பாத்தாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment