பொலிசார் கைது செய்வதற்குத் தேடிய மது மாதவவை தாம் 35 நாட்கள் ஒளித்து வைத்திருந்து, அடிப்படை உரிமை மீறல் வழக்கின் ஊடாக அவரது கைதைத் தவிர்த்துக் கொண்டதாக விளக்கமளித்துள்ளார் உதய கம்மன்பில.
இந்நிலையில், ரிசாத் பதியுதீன் தலைமறைவாகக் கூடும் என்பது தொடர்பில் பொலிசார் விழிப்புணர்வுடன் இருந்திருக்க வேண்டும் எனவும், சட்டமா அதிபரின் அறிவுறுத்தல் வெளியானதும் குற்றப்புலனாய்வுப் பிரிவிலிருந்தே அவருக்கு தகவல் வழங்கியிருக்கக் கூடும் எனவும் கம்மன்பில சந்தேகம் வெளியிட்டுள்ளார்.
இதேவேளை, ரிசாதை கைது செய்யப் போவதாக அவசரமாக வெளி வந்த செய்திகள் காரணமாகவும் அவர் ஒளிந்திருப்பதற்கான வாய்ப்பு உருவாகி விட்டதாகவும் தெரிவிக்கின்ற கம்மன்பில பொலிசாரின் நடவடிக்கைகளில் நம்பிக்கையில்லையென்கிறார்.
No comments:
Post a Comment