மேலும் 201 பேர்: பேலியகொட 'கொத்தனி' உயர்வு - sonakar.com

Post Top Ad

Saturday 24 October 2020

மேலும் 201 பேர்: பேலியகொட 'கொத்தனி' உயர்வு



ஒக்டோபர் 4ம் திகதி மினுவங்கொட ஆடைத்தொழிற்சாலையில் பணி புரிந்த பெண்ணொருவருக்கு கொரோனா தொற்றிருந்தமை கண்டறியப்பட்டதிலிருந்து இதுவரையான மொத்த எண்ணிக்கை 4000த்தை எட்டியுள்ளது.


தற்சமயம் மினுவங்கொட மற்றும் பேலியகொட மத்திய மீன் சந்தை தொடர்பானவர்களே தொடர்ச்சியாக தொற்றுக்குள்ளாகியுள்ளனர்.


இன்றைய தினம் மேலும் 201 பேருக்கு தொற்றிருக்கின்றமை கண்டறியப்பட்டுள்ள நிலையில் அதில் 140 பேர் பேலியகொடவோடு தொடர்புடையவர்கள் எனவும் 24 பேர் நாட்டின் பல மீன்பிடித்துறைமுகங்களோடு தொடர்புடையவர்கள் எனவும் விளக்கமளிக்கப்பட்டுள்ளது.


இதுவரையில் இலங்கையில் 7354 பேர் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ள அதேவேளை அதில் 3883 பேர் இம்மாதத்தில் கண்டறியப்பட்டுள்ளமையும் தற்சமயம் 3625 பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment