திவுலபிட்டி: 1500க்கு மேற்பட்ட மாணவர் தனிமைப்படுத்தல் - sonakar.com

Post Top Ad

Monday 5 October 2020

திவுலபிட்டி: 1500க்கு மேற்பட்ட மாணவர் தனிமைப்படுத்தல்

 


திவுலபிட்டியவில் கொரோனா தொற்றுக்குள்ளான பெண்ணின் புதல்வி கல்வி கற்று வந்த பாடசாலையின் 1500க்கு மேற்பட்ட  மாணவர்களை தனிமைப்படுத்தலில் ஈடுபடுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.


ஆடைத்தொழிற்சாலையில் பணி புரிந்து வந்த குறித்த பெண் கடந்த 30ம் திகதி சுகயீனம் காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். நேற் முன் தினம் அவருக்கு கொரோனா தொற்றிருப்பது கண்டறியப்பட்டதையடுத்து அரசு பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.


குறித்த பெண்ணோடு பணி புரிந்த 69 பேர் ஏலவே கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளமை கண்டறியப்பட்டுள்ளதுடன் மேலும் ஆயிரக்கணக்கானோருக்கு பி.சி.ஆர் பரிசோதனைகள் நடாத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment