பிறேமலால் ஜயசேகர நாடாளுமன்ற உறுப்பினராக பதவியேற்க முடியாது என சட்டமா அதிபர் விளக்கமளித்துள்ள நிலையில், நீதியமைச்சும் அதனை உறுதி செய்யுமாக இருந்தால் அவரது இடத்தை நிரப்ப சீட்டுக் குலுக்கல் முறையிலேயே அடுத்த நாடாளுமன்ற உறுப்பினர் தெரிவு செய்யப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள குறித்த நபர், மேன்முறையீடு செய்துள்ளதன் பின்னணியில் அவருக்கு நாடாளுமன்றம் செல்ல அனுமதியிருப்பதாக முன்னர் விளக்கமளிக்கப்பட்டிருந்தது.
எனினும், அது சட்டத்துக்குப் புறம்பானது என சட்டமா அதிபர் விளக்கமளித்துள்ள நிலையில் பெரும்பாலும் வேறோரு நபர் தேர்ந்தெடுக்கப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையிலேயே அதனை சீட்டுக் குலுக்கல் முறையில் தெரிவு செய்யவுள்ளதாக தேர்தல் ஆணையாளர் விளக்கமளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment