நாடாளுமன்ற விவகாரத்தில் சட்டமா அதிபர் தலையிட முடியாது: வாசு - sonakar.com

Post Top Ad

Tuesday, 1 September 2020

நாடாளுமன்ற விவகாரத்தில் சட்டமா அதிபர் தலையிட முடியாது: வாசு

நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரை அனுமதிப்பது தொடர்பில் தலையிடுவதற்கு சட்டமா அதிபருக்கு எதுவித அதிகாரமுமில்லையென்கிறார் அமைச்சர் வாசுதேவ நானாயக்கார.


மரண தண்டனைக் கைதி பிறேமலால் ஜயசேகரவை நாடாளுமன்றுக்கு அனுமதி வழங்குவது தொடர்பில் சட்டச் சிக்கல் தோன்றியுள்ள நிலையில், குறித்த நபர் நாடாளுமன்ற உறுப்பினராக சட்டத்தில் அனுமதியில்லையென சட்டமா அதிபர் விளக்கமளித்துள்ளார்.


இது தொடர்பில் வினவப்பட்ட போதே இவ்வாறு தெரிவித்துள்ள வாசுதேவ, சபாநாயகரே இது தொடர்பில் தீர்மானிக்க முடியும் எனவும் விளக்கமளித்துள்ளார்.

No comments:

Post a Comment