ஆசியாவின் பலமிக்க பொருளாதாரத்தை உருவாக்குவோம்: ஜோன்ஸ்டன் - sonakar.com

Post Top Ad

Monday 7 September 2020

ஆசியாவின் பலமிக்க பொருளாதாரத்தை உருவாக்குவோம்: ஜோன்ஸ்டன்

ஆசியாவின் பலமிக்க பொருளாதாரம் உள்ள நாடாக இலங்கையை உருவாக்கப் போவதாக தெரிவிக்கிறார் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னான்டோ.


கடந்த மஹிந்த ஆட்சிக்காலத்தில் பல அமைச்சர்கள் இலங்கையை ஆசியாவின் ஆச்சரியமாக மாற்றப் போவதாக தெரிவித்து வந்த நிலையில், முஸ்லிம் அரசியல்வாதிகள் கல்முனையை டுபாயாகவும் கிழக்கில் சில ஊர்களை சிங்கப்பூர் மற்றும் இதர வளர்ச்சியடைந்த நாடுகளாகவும் உருவாக்கப் போவதாகவும் 'சூளுரைத்து' வந்தனர்.


தற்போது மீண்டும் இலங்கையை ஆசியாவின் பலமிக்க பொருளாதாரமாக மாற்றப் போவதாக ஜோன்ஸ்டன் தெரிவிக்கின்ற அதேவேளை 2000 பில்லியன் ரூபாவுக்கு அதிகமான கடனைப் பெறுவதற்கு அரசு முயற்சி செய்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment