வருடா வருடம் நாடாளுமன்றத்தை கலைக்க விட முடியாது: கிரியல்ல - sonakar.com

Post Top Ad

Tuesday, 22 September 2020

வருடா வருடம் நாடாளுமன்றத்தை கலைக்க விட முடியாது: கிரியல்ல20ம் திருத்தச் சட்டம் என்ற போர்வையில் வருடா வருடம் நாடாளுமன்றைக் கலைக்க அனுமதிப்பது நாடாளுமன்றத்தைக் கேலிக்கூத்தாக்கும் நடவடிக்கையென விசனம் வெளியிட்டுள்ளார் லக்ஷ்மன் கிரியல்ல.


19ம் திருத்தச் சட்டத்தை நிறைவேற்ற அனைத்து கட்சிகளுடனும் ஆறு சுற்று பேச்சுவார்த்தைகள் இடம்பெற்றதோடு தற்போது ஆளுங்கட்சியில் உள்ளவர்களும் ஆதரவளித்தே அச்சட்டம் நிறைவேற்றப்பட்டதாகவும் தற்போதைய அரசு யாருடனும் பேசாமல் தன்னிச்சையாக செயற்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.


மக்கள் தெரிவு செய்யும் நாடாளுமன்றுக்கு இவ்வாறான அச்சுறுத்தல் ஏற்படுவதை அனுமதிக்க முடியாது என கிரியல்ல மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment